The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
PRISL Awards 2025: விண்ணப்ப காலக்கெடு ஒக்டோபர் 10 வரை நீடிப்பு
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையின் முன்னணி அமைப்பான PRISL, தனது பெருமைக்குரிய PRISL Awards 2025 இற்கான விண்ணப்பக் காலக்கெடுவை ஒக்டோபர் 10 வரை நீடித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்தத் தொழில்துறை முழுவதும் உள்ள தொழில்துறையாளர்களின் வலுவான ஆர்வத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காலக்கெடு நீடிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதிகமான நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தமது சாதனைகளை வெளிப்படுத்தவும் தேசிய அங்கீகாரத்தைப் பெறவும் வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் PRISL Awards Night நிகழ்வு 2025 நவம்பர் 25ஆம் திகதி BMICH மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், இது தொழில்துறையின் முதன்மை நிகழ்வு எனும் அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது. இந்த மாலைநேர நிகழ்வானது, தொழில்துறைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்து, தொழில்துறையின் விசேடத்துவத்தைக் கொண்டாடுவதன் மூலம், இத்துறையின் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்திற்கு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் நீடிக்கப்பட்டுள்ள காலக்கெடுவைப் பயன்படுத்தி, 2025 ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தற்போது அதன் மைல்கல் பதிப்பான 2ஆவது பதிப்பை முன்னெடுக்கும் PRISL Awards நிகழ்வானது, PRISL நிறுவனத்தால் 65 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் கௌரவத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு பிரிவும் சுதந்திரமான நிபுணர் குழுக்களால் மதிப்பீடு செய்யப்படுவதால், நியாயத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், இந்த விருதுகள் தொழில்துறை அங்கீகாரத்திற்கான ஒரு அளவுகோலாக வலுப்பெறுகின்றன. வெற்றியாளர்கள் இலங்கைக்குள் புகழைப் பெறுவது மட்டுமல்லாமல், தமது நற்பெயரை சர்வதேச சந்தைகளிலும் பலப்படுத்தும் வாய்ப்பை பெறுகின்றனர். இது, அவர்களை முன்னணித் தலைவர்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களாக நிலைநிறுத்துகிறது. அத்துடன், PRISL Awards 2025 இல் பங்கேற்பதன் மூலம், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையின் எதிர்காலத்திற்கான தமது அர்ப்பணிப்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பை பெறுகின்றனர். இந்த மதிப்புமிக்க தேசிய தளத்துடன் இணைவதன் மூலம், பங்கேற்பாளர்கள் தம்மைத் தொழில்துறை முன்னோடிகளுடன் நிலைநிறுத்திக் கொள்வதுடன், சிறந்த புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையைக் காண்பிக்க முடியும். இங்கு பெறப்படும் அங்கீகாரமானது, உற்பத்தி, ஏற்றுமதி, ஆராய்ச்சி மற்றும் பொறுப்பான நடைமுறைகளுக்கான தமது பங்களிப்புகளைக் கொண்டாடுவதோடு, தொழில் வல்லுநர்களுக்கும் குழுக்களுக்கும் பலம் வாய்ந்த ஊக்கத்தை அளிக்கிறது.
இதில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்து வெளியிட்ட, PRISL இன் தலைவர் K.A.C. வித்யாரத்ன, “PRISL Awards வர்த்தக வெற்றியை மட்டுமல்லாது, எமது தொழில்துறையின் எதிர்காலத்தை வரையறுக்கும் புத்தாக்கம், ஈடுகொடுக்கும் தன்மை மற்றும் நிலைபேறான நடைமுறைகளையும் கொண்டாடுகின்றன. இதற்கான காலக்கெடுவை நீடிப்பதன் மூலம், மேலும் பலரின் குரல்களுக்கு, அதாவது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும், இந்த தேசிய அரங்கில் கௌரவத்தை பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம்.” என்றார்.
பிளாஸ்டிக், இறப்பர், லேட்டக்ஸ் மற்றும் மீள்சுழற்சித் துறைகளில் சிறப்பைக் கௌரவிக்கும் முதன்மைத் தளம் எனும் வகையில் PRISL Awards ஆனது, இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி வருமானத் துறைகளில் ஒன்றிற்குப் பங்களிக்கும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுகிறது. இந்தத் தொழில்துறையானது வருடாந்தம் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுவதுடன், நாட்டின் மூன்றாவது பாரிய வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டும் துறையாகவும் உள்ளது. இந்த நிகழ்வானது, விருதுகளைத் தாண்டி, வர்த்தகப் பெயரை உயர்த்திற்கு கொண்டு செல்வதற்கும், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களுடன் இணைவதற்கும், இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றிற்கு வழிகாட்டும் ஊக்குவிப்பாளர்களாக தமது பங்கை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்ப வழிகாட்டல்களுக்கு, https://awards.prisrilanka.com எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0112-864354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
PRISL பற்றி
பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறைக்கான இலங்கை நிறுவனம் (PRISL) ஆனது, 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய நிபுணத்துவ அமைப்பாகும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் மூலம் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புடன், தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பேணுவதிலும் நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் PRISL முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிறுவனம், பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் மூலோபாயப் பங்காண்மைகளைப் பேணுவதன் மூலம் விசேடத்துவத்தை மேம்படுத்துகிறது. இது இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறைகள் உலகளாவிய தரநிலைகள் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளுடன் சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.bh/register/person?ref=GGYHGRE
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.