உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் யார்?
நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்கண்டி மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே நேற்றைய தினம் பதவியேற்றனர். இதில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் அதிக கவனத்தை பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம்…