நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முகமது!

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் முடிவின்படியும், கட்சித் தலைமைக்கு துரோகம் இழைக்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்மாயில் முத்து முகமது, தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More