இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…

ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்
இலங்கையின் மிகவும் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் அனுசரணையுடன் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 சமபோஷ மாகாணப் பாடசாலை விளையாட்டுப்போட்டி’ மேல், வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய 7 மாகாணங்களை மையமாகக் கொண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் 70ற்கும் அதிகமான போட்டிகளில் 3000ற்கும் அதிகமான பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கெடுக்கவுள்ளனர். வெற்றிபெறும் பாடசாலைகள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கு, பதக்கங்கள், கேடயங்கள்,…