நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

வசூலை வாரிக்குவிக்கும் டிராகன் திரைப்படம். இதுவரை எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக அறிமுகமாகி, பின் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிராகன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி box officeல் இணைந்து சாதனை படைத்துள்ளது. ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது….