நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு
இந்தியாவின் மத்திய அரசினால் த.வெ.க கட்சியின் தலைவர் திரு.விஜய்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆய்வுசெய்து வழங்கப்பட்ட மாநில உளவுத்துறையின் அறிக்கையின் படி மத்திய அரசால் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வகையான பாதுகாப்புஇதற்க்கு முன் திரு.கருணாநிதி, திரு.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்ச்சியாக இருந்த போதும் கரும்பூனை படை (BLACK CATS) எனும் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கரும்பூனைப்படை பாதுகாப்பினை பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் VIP பாதுகாப்பாக CRPF மாற்றினார். அதில் 6வகை பிரிவுகள்…