தபால்மூல வாக்களிப்பு – மூன்றாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது.   கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…

Read More

கோடிகளில் ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில்,…

Read More

இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய குழு

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழு இவ்வாறு நாட்டுக்கு வருகை தருகிறது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று 28 முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பல…

Read More

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17…

Read More

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல்…

Read More

போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி – ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் விருப்பத்தின் பேரில் அவரது உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை…

Read More

மதம் கடந்த நல்லிணக்கம்.

Pope Francis அவர்களினது மறைவால் துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு இந்து குருமார் அமைப்பு சார்பாக தலைவர் சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Read More

சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும். (27)  அதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.  உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் போற்றப்படும் மற்றும் செங்கடகல இராச்சியத்தில் உள்ள வரலாற்று…

Read More

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தைச் சரி செய்து, பின்னர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள…

Read More

நம் நாட்டின் பிரபல பாடகர் உயிரிழந்தார்

பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார். பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள அவர், 1975 ஆம் ஆண்டளவில் முழுநேர இசை வாழ்க்கையில் நுழைந்து 4 தசாப்தங்களுக்கும் மேல் இசை துறையில் பணியாற்றியிருந்தார்.

Read More