மருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பேன்ஹக் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

Read More

சுற்றுலா வேன் விபத்து – 7 பேர் பலி

அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணம் யல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே நேற்று மாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 14 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் வேன் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு…

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என்றும், காணாமல் போன பெண் 22 வயதுடையவர் என்றும், இருவரும் கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரும் காணாமல் போன பெண்ணும் மற்றொரு குழுவினருடன் கலா ஓயாவில் நீராடிய போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியதாக…

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட லொக்கு பெட்டி

பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான லொக்கு பெட்டி என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த நபர் அத்துருகிரிய பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி க்ளப் வசந்த எனப்படும் வர்த்தகர் வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டு, மேலும் பலரைக் காயமடையச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக அடையாளம்…

Read More

ஜனாதிபதிக்கு வியட்நாமில் சிறப்பு வரவேற்பு

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங்,…

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அரநாயக்க பொலிஸ் பிரிவின் அரம பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார்…

Read More

குடும்பத்தகராறில் பெண்ணொருவர் கொலை

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர். உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்திய நிபுணர் இதனைக் குறிப்பிட்டார். “இன்ஹேலர்” சிகிச்சையானது…

Read More

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில்…

Read More