கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் – வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்துடன் வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர், வீதி விபத்துகள், நீர் நிலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க வலியுறுத்தியுள்ளார். வீதி விபத்துகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

