வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்

கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, கெலிஓயா, கஹட்டபிட்டிய முதலான பகுதிகளில் உள்ள பிராதன வீதிகளில் குவிந்துள்ளன. அவற்றை அகற்றுவது கூட பாரிய சிரமமாக உள்ளதாகத் தெரியவருகிறது. பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட இப்பொருட்களை எங்கு எடுத்துச் செல்வது?  எங்கே? கொட்டுவது என்பன கூட பாரிய சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரிசி, மாவு, பருப்பு, வெங்காயம், மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆடை அணிகள், வீட்டுத்தளபாடங்கள்   என விதம்…

Read More

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபரொருவரை நேற்று புதன்கிழமை  (10) அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவை பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் சாரதி ஒருவர் 19வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் அதிவேக வீதியில் கழிவுப் பொருட்கள் அடங்கிய பையை வீசியதை அதிவேக வீதியில் சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் அவதானித்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அதிவேக நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ்…

Read More

மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸில் புதன்கிழமை (11) இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய மரபில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அகீகா (Aqiqah) சடங்கு நடத்தப் பெற்றதாக ஃபெஸ் நகரை சேர்ந்த சட்டதரணி தெரிவித்துள்ளார். கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் எட்டு குடும்பங்கள் வசித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டதரணி மேலும்…

Read More

குற்றச் செயல்களை மேற்கொள்ள பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் தலைமையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை மேற்கொள்ளுவதற்கு பண ஒப்பந்தங்களில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு 10 பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள்…

Read More

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம் – பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று புதன்கிழமை (10) ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார். இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்…

Read More

மருந்துப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – ஹன்சக விஜேமுனி

நாட்டில் அனர்த்த நிலைமை ஏற்பட்டபோதும் அரச  வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.   கண்டி செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்த நிலைமைகளை அடுத்து நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்று கூறப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை. போதியளவு மருந்துப் பொருட்கள் நாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அனர்த்த நிலைமைகளை அடுத்து பாதுகாப்புக் கருதியே முன்னெச்சரிக்கையாக…

Read More

மேஃபீல்ட் தோட்ட குளவிக்கொட்டுச் சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் விளக்கம்

மேஃபீல்ட் தோட்டப் பிரிவில் நவம்பர் மாதம் புதன்கிழமை 26ஆம் திகதி இடம்பெற்ற குளவித் தாக்குதலில் ஒரு தொழிலாளி காயமடைந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  குளவிக்கொட்டு சம்பவத்தின்போது நோயாளர் காவு வண்டி கிடைக்காததால் தோட்ட நிர்வாகம் உடனடியாக தோட்டத்திற்கு சொந்தமான லொறி மூலம் போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்தது. இருப்பினும்,  தற்காலிக வீதித் தடை காரணமாக  தொழிலாளி பின்னர் முச்சக்கரவண்டி மூலம் கொட்டகலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குச் சிகிச்சை…

Read More

பாலர் பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு 

அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கக்கூடிய நிலையில் இருப்பின், டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட, தற்போது பாதுகாப்புடன் செயற்படக்கூடிய நிலையில் உள்ள அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடகப் பிரிவின் ஊடாக…

Read More

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்

இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி  மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர்  சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  (09)  பார்வையிட்டனர். ஒப்ரேஷன் சாகர் பந்து …

Read More

பறங்கி, பாலி ஆற்றின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை

பறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது….

Read More