பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பொசொன் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் பொசொன் தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும்…

Read More

தபால் ரயிலில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

இரண்டு நாள் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால், இன்று (01) முதல் இரவு தபால் ரயிலில் ஒரு தபால் பெட்டியை மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை-பதுளை மற்றும் கோட்டை-காலி இரவு தபால் ரயில்களில் ஒரு தபால் பெட்டி மேலதிகமாக இணைக்குமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களாக தபால் பெட்டிகள் தபால் ரயிலில் இருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More

காத்தான்குடி நகர வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..

Read More

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை

வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் தாக்குதலுக்க இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிழந்த நபர் தனது தாயாரை கோடரியால் தாக்க முயன்றதாகவும், கோடரியை அவரது கழுத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த தாயின் மருமகன் (மகளை மணந்தவர்) தடியொன்றை எடுத்து அவரைத் தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலில் அந்த நபர் வீட்டுக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். உயிரிழந்த நபர் வீட்டில் வசிப்பவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு…

Read More

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கைத் தூதரகங்கள் இயங்காத…

Read More

லொறி விபத்தில் சாரதி படுகாயம்

பாதெனிய – அநுராதபுரம் பிரதான வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் லொறி ஒன்று(30) விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி சாரதியின் நித்திரை காரணமாக அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் லொறியின் சாரதி படுகாயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு…

Read More

இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி – வொஷிங்டனில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு விடுத்த அழைப்பின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இருநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான…

Read More

ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

Read More