உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்து, மேற்படி பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. பிரதம நீதவானிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் படி, இந்த முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக…

Read More

ரயில் நிலைய பொறுப்பதிகாரிககளின் வேலை நிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து சபை

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய…

Read More

பவுசர் விபத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீற்றர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பவுசரில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீற்றர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , ​​பவுசர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள்…

Read More

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் , இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த நால்வரும் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு சட்டவிரோதமான…

Read More

SANKARAA hosts “SANKARAA Connect” to Showcase NetSuite Innovation and Customer Success in Sri Lanka 

30th April 2025, Colombo – SANKARAA Tech successfully hosted SANKARAA Connect, the first Oracle NetSuite event in Sri Lanka in over five years—marking a significant return to in-person industry engagement since the pandemic.  The event brought together a vibrant mix of business leaders, technology professionals, and NetSuite users. Under the theme “COMPASS for your Cloud…

Read More

வர்த்தக நிலையமொன்றை சோதனையிட சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்கிய இருவர் கைது…!

குருநாகல் – கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இருவர் அச்சுறுத்தப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தாக்குதலைக் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நடத்தியதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், தற்போதும் சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

பேருந்து இறக்குமதி தொடர்பில் புதிய தீர்மானம்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து…

Read More

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.56 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read More

பேக்கரி ஊழியரின் மர்ம மரணம்! ஆரம்பமாகும் விசாரணை

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவர் அங்குகுள்ள படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மத்துகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய களுத்துறை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Read More

நாட்டில் தீவிரமாக பரவும் டெங்கு நோய்

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது 48 சதவீதமாகும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்…

Read More