பண்டிகை காலத்தில் பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 6,000…

Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவின் பெலிகஸ்வெல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய, நேற்று (09) பிற்பகல் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 46 வயதுடைய திக்கெலே, பெலிகஸ்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை…

Read More

நாட்டின் இன்றைய காலநிலை

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சப்ரகமுவ,…

Read More

ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை – சீனாவுடனான பாரிய வர்த்தக மோதல்

ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பின் விளைவாக எல்லா நாடுகளும் திணறிப்போயிருக்க. சீன மட்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவுக்கெதிரான வரியை அவர்கள் அதிகரித்தார்கள். தற்போது சீனா மீதான வரிகளை 125 வீதமாக உயர்த்தி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள x தள அறிவிப்பில், “உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய அவமரியாதையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும்…

Read More

இலங்கை சிறுவர்களுக்கிடையில் அதிகரித்துவரும் மந்தபோசணை

இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கணிசமான அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசணை மட்டம்…

Read More

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த இளைஞன் – முழுமையாகப் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது இறந்த இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு (JMO) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் இளைஞரின் சடலத்தை முழுமையாகப் பிரேத பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் செய்யப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (ஏப்ரல் 09)…

Read More

அட்லீ இயக்கவிருக்கும் 6வது படம் 600 கோடி ரூபா பட்ஜெட்டா???

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்ற அது இயக்குனர் சங்கர்தான். அவரோட திரை வீட்டில் இருந்து வந்து இன்று பான் இந்தியா முழுவதும் கலக்கும் இயக்குனர் நாயகன் அட்லீயின் 6வைத்து படத்துக்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியாகி சக்கை போடு போடுது… புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் இணையும் படத்தின் அறிவிப்பு தான் இது.அதுவே வழக்கமான பணியில் இருந்து வேறுபாட்டிற்கு. நல்ல இருக்கு…

Read More

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது

மீன்களை ஏற்றிச் செல்லும் லொறியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் துன்கல்பிட்டிய பொலிஸாரால் இன்று (ஏப்ரல் 09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். துன்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது லொறியிலிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 5 கோடியே…

Read More

அமெரிக்காவின் வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – சஜித்

அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார்.  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்குமென முன்னதாகவே நாம் அரசாங்கத்திற்கு அறியப்படுத்தினோம்.  அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை…

Read More

CIDக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Read More