நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

இலங்கையில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

Read More

மூடப்பட்ட யால தேசிய பூங்கா

தற்போதைய மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று (மார்ச் 1) முதல் மழை…

Read More

Laugfs எரிவாயு குறித்து வெளியான அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான laugfs எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 3,680 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

கோலாகலமாக ஆரம்பமான ஜெர்மனியின் “தெரு திருவிழா”

ஜெர்மனியின் கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றான தெரு திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது கொலோன் நகரில் வண்ணமயமான ஆடைஅணிந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்கள் திருவிழா, கவுன்ட் டவுன் உடன் இவ்விழா ஆரம்பமானது இந்த தெரு திருவிழாவில் விதவிதமான ஆடை அணிந்திருந்த பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 20,000 சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. DE S. ராஜகருணா தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும்…

Read More

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாளை மறுதினம் இலங்கையில் நோன்பு ஆரம்பம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) முதல் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் புனித ரமலான் நோன்பு காலத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய பிறை இன்று தென்படாததால், இவ்வாறு ரம்லான் நோன்பு காலம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் தெரிவித்துள்ளது.

Read More