இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது : ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். இந்த தீர்மானமானது இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டார். ஒரு பாரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க…

Read More

திபெத்தில் நில அதிர்வு

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

Read More

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், “இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது. இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார். இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும்…

Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலதர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். நேற்றிரவு (11) மேற்படி வீட்டில் ஏற்பட்ட தகராறில் நபரொருவர் வீழ்ந்துக் கிடப்பதாக பேருவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவரை பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருக்கும் அவரது திருமணத்துக்கு…

Read More

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை காலம் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடங்கியது.

Read More

இன்று வெசாக் பௌர்ணமி தினம்

பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர். புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும். மனிதனுக்கு ஏற்படுகின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவனது ஆசையே என்ற உண்மையை உணரச் செய்து, அவர்களின் ஆசைகளையும் பற்றுக்களையும் துறக்கச் சொல்லி நல்வழிப்படுத்திய மகானே கௌதம புத்தர் ஆவார். பௌத்த தர்மமானது…

Read More

ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (11) காலை புறப்பட்ட யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (11) காலை 7.30 மணியளவில் பளை கச்சார்வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் பளை தம்பகாமம் பகுதியைச்சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பளை…

Read More

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.  இது தொடர்பில் கடிதம் ஊடாக எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ள திலக் சியம்பலாப்பிட்டிய, தான் குறுகிய காலத்திற்கு இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  அதன்படி, அவர் தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் சமர்ப்பித்ததாகவும், அவரது இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Read More

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Read More

சிக்குன்குனியா வைரஸ் தொற்று தொடர்பில் அவதானம்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதுடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், மழையுடனான வானிலையினால் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும்…

Read More