பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயம்

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று(மார்ச் 18) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இ.போ.சபை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஒரு மரம், ஒரு கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

Read More