ஐஸ்போதைப்பொருளுடன் மிரிஹான பகுதியில் ஒருவர் கைது.

மிரிஹான பொலிஸ் பிரிவின் பிடகோட்டே சந்தியில் நேற்று (மார்ச் 10) 10g 250mg ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு.

கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று(மார்ச் 7) இரவு டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டர் கேளிக்கை விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 12ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய குற்றவாளி யார் என்று இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் அந்த குற்றவாளியைப் பிடிக்க…

Read More

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிப்பு

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் காவல்துறை உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் காவல்துறையினருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என காவல்துறை…

Read More

மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கிரிபத்கொட பகுதியில் வியாபார நிலையங்களை வழங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More

மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறி, 17 வயது மாணவனால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்குரிய அதிபர், தலைமுடி வெட்டப்படவில்லை எனவும், கருப்பு நிற காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் கூறி குறித்த மாணவனை…

Read More

கீத் நொயார் கடத்தல் விவகாரம் – கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் சந்தேகநபர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர்.

Read More

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது

செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெரலுகஹ பகுதியில் 146 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் செவனகல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய கொளர வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பி.சி.சி பலாம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More