தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
சுங்க கிடங்கில் ரூ.110 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சூட்கேஸ் கைப்பற்றல்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்க கிடங்கு ஒன்றில் ரூபாய் 110 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான குஷ் கஞ்சா போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத பொருட்கள் மற்றும் பொதிகள் வைத்திருக்க பயன்படுத்தப்படும் களஞ்சியசாலை கிடங்கில் இருந்து இந்த சூட்கேஸ் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாட்டுக்கு வருகை தந்த பயணி ஒருவரால் இந்த சூட்கேஸ் கைவிடப்பட்டதாக விசாரணைகளில்…