தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்- பணியாளர்கள் செய்த செயல்
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். போர்த்துகீசிய…

