நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2,84,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (19) முதல் சனிக்கிழமைக்குள் மேலும் 3,51,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுரை வழங்கியது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

