தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி
இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில் இந்த திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 500,000 ரூபாய், 1,000,000 ரூபாய் மற்றும் 2,000,000 ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான…

