இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
தென்கொரிய முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மூன் ஜே இன். கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த அவர் சட்ட விரோதமாக தனது முன்னாள் மருமகனை விமான போக்குவரத்து துறை இயக்குனராக பதவியமர்த்தி உள்ளார். எனவே அவர் பெற்ற ஊதியம், சலுகைகள் மூலம் தாய்லாந்தின் தாய் ஈஸ்டர் ஜெட் விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் மூன் ஜே இன்னும்…

