‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஏப்ரல் 8, 9 மற்றும் 10இல் பாராளுமன்றம் கூடுகின்றது.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுதற்காகச் சமர்ப்பிக்க சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (ஏப்ரல் 02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை…

