யானை தாக்கியதில் ஒருவர் காயம்

ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.  கோவில் ஊர்வலம் முடிந்து, யானையைக் கோவில் கம்பத்தில் கட்டி வைத்து ஓய்வெடுக்க வைத்தபோது, ​​ஒரு இளைஞன் யானைக்கு உணவளிக்க முயன்றதாகவும், யானை திடீரென அந்த இளைஞனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  யானையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கொட்டாகலைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காயமடைந்தவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனத் திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.  யானைப் பாகன் அதிக…

Read More

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து…

Read More

புகையிரத விபத்தில் 5 யானைகள் பலி.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மீனகயா” புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 5 யானைகள் உயிரிழந்துள்ளதுடன் இரு யானைகள் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வெப்ரவரி 19) இரவு கல்லோயா புகையிரத நிலையத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் காரணமாக அந்த பிரதேசத்தில் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More