எல்ல பகுதிக்கு பயணப்படும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் பரவியுள்ளதால் எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால்எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More

பதுளை – இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ, அதிகளவான நிலப்பரப்பு தீயில் நாசமாகின.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் வெப்ரவரி 13ம் திகதி இரவு கட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த காட்டுத்தியானது குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல்….

Read More