டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு…