இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
நுவரெலியாவில் கடும் மழை – பல குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன்காரணமாக, தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் தற்பொழுது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக இஸ்கிராப் தோட்டத்தின் 16 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தோட்ட ஆலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பயிரிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன்…

