கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும்…

இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது. இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.