விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பற்றவையிடச்சென்ற பிரதமர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை இன்று (வெப்ரவரி 15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து பல்வேறு முக்கிய…

Read More

முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு

புலம்பெயர்ந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முதலீட்டாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னர் காற்றாலை மின் உற்பத்திக்கு முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று இன்று(வெப்ரவரி 14) யாழ்மட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.

Read More

ஆளுநர்களும்… ஆசிரியர்களும்…!

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (வெப்ரவரி 13) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும்…

Read More

நகுலேஸ்வரப்பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே” எம்பெருமான் சிவபெருமானை ஈசனாக தரிசிக்க ஈழத்தில் காணப்படுகின்றன பஞ்சஈஸ்வரங்கள். அதில் தலச்சிறப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரத்தில் இன்று(வெப்ரவரி 13) கொடியேற்றம் நிகழ்ந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது. நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமானுக்கு காலை 7மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் “அரோகரா” கோசத்தோடு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துவஜாரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது. மூர்த்தி,…

Read More

நல்லூரான் தெற்கு வாசல் வளைவு

எம்பெருமான் முருகப்பெருமானுக்கே உரித்தான தைப்பூச(11.02.2025) நன்னாளில் தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய அமைப்பின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் தெற்கு கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்பு கண்டது. இந்த தெற்கு வாசல் வளைவு அமைப்பானது யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக அமையப்பெற்றுள்ளது. புகைப்படம் – https://www.facebook.com/ingaran.sivashanthan?mibextid=ZbWKwL

Read More