தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும். (27) அதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைக்கும். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் போற்றப்படும் மற்றும் செங்கடகல இராச்சியத்தில் உள்ள வரலாற்று…

