‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
5 கோடி பெறுமதி கேரள கஞ்சா கடத்திய இருவர் கைது
மீன்களை ஏற்றிச் செல்லும் லொறியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் துன்கல்பிட்டிய பொலிஸாரால் இன்று (ஏப்ரல் 09) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். துன்கல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது லொறியிலிருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 5 கோடியே…

