தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை
மே மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் அறிவித்துள்ளார்.

