நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.
தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

