36 மில்லியன் ரூபா சொத்து வழக்கு: பெலியத்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க பிணையில் விடுதலை

பெலியத்த பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள சொத்துகளை முறையற்ற வகையில் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் தவிசாளர் சிறில் முனசிங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (22) பிணையில் விடுவிக்கப்பட்டார். சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன்,…

Read More

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்தமை சட்டத்திற்கு எதிரானது என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த “Gotta go home” போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, மேல் மாகாணத்தின் அப்போதைய சிரேஸ்ட பொலிஸ்  மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவர் தனிப்பட்ட வகையில் முறைப்பாடு தாக்கல் செய்தார்.  அந்த தனிப்பட்ட முறைப்பாட்டை தள்ளுபடி செய்ய அப்போதைய கொழும்பு தலைமை நீதிபதி எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு எதிரானது…

Read More

பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு வேண்டாம் ; கோப்பாயில் அரங்கினை அமைக்க எனது காணியை நன்கொடையாக தருகிறேன் – கௌரி பொன்னையா

யாழ்ப்பாணத்துக்கான உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான காணியை தான் நன்கொடையாக கொடுத்து உதவ தயாராக உள்ளதாக சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியாரான கௌரி பொன்னையா தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில்,  யாழ். குடாநாட்டில் உள்ளக விளையாட்டு அரங்கத்தை  அமைப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் என கேள்வியுற்றேன். அதற்காக புராதன மரங்களை அழிக்கவுள்ளதாகவும் கேள்வியுற்றேன்.  இயற்கையை அழிக்காது, புராதன மரங்களை அழிக்காது,…

Read More

மருதங்கேணியில் 75 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது!

மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு…

Read More

நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின்  நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளர்.  இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,  அந்த பாலத்தின் புதிய…

Read More

119 என்ற அவசர இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல் !

119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம்  குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன. தவறான முறைப்பாடுகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தெரிவிக்கப்படுகின்றன.  அவசரகாலத்தில் பொலிஸ் 119 அவசர…

Read More

பேரிடர் காலத்தில் அரசாங்கம் எடுத்த சுகாதார நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டு!

பேரிடரினால் ஏற்படும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார். பாரம்பரிய மருத்துவம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இரண்டாவது உலகளாவிய உச்சி மாநாடு புதன்கிழமை (17) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஆரம்பமானது. அந்த வகையில் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கும் உலக சுகாதார அமைப்பின்…

Read More

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து : தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கும் – ஜப்பான் தூதுவர்

நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்தார். டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசு யுனிசெஃப் (UNICEF) ஊடாக இலங்கைக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இதனடிப்படையில், டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருடன் இணைந்து, வீடமைப்பு, நிர்மாணம்…

Read More