ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள்,…

Read More

‘சமூக சக்தி’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை அடிமட்ட அளவில் செயல்படுத்துவதற்கான அரச அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டம், ரன்மினிதென்ன டெலி சினிமா கிராமத்தில் (16) ஆரம்பமானது. (17) தொடரும் இந்தப் பயிற்சியில் மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி சபைகளை நிறுவுவதன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் பிரதேச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக வலுவூட்டலுக்காக…

Read More

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் இணைந்து புதன்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலிருந்து பொலிஸாரால் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் வைத்தியசாலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  எனவே, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு வைத்தியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்…

Read More

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்காக மஹகந்தவில் மாடிவீடு

அனர்த்தத்தில் வீடு இழந்தவர்களுக்கு கண்டி, மஹகந்த பிரதேசத்தில் மாடி வீட்டுத்திட்டம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கங்கவட்ட கோரளை பிரதேச சபைத் தலைவர் சேனாதீர தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற கங்கவட்ட கோரளை பிரதேச அபிவிருத்தி சபைக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அனர்த்தத்தின்போது கண்டி கங்கவட்ட கோரளைப் பிரதேசத்தில் வீடுகளை முற்றாக இழந்தவர்களுக்காக இந்த மாடிவீட்டுத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.

Read More

எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர், நேற்று (16) எழுவைதீவு பகுதிக்குக் கள விஜயம் மேற்கொண்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர். இந்த விஜயத்தின் முக்கிய அம்சங்கள்: இந்தக் கள விஜயத்தில் மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி 

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, தமிழ் மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து இந்த வேலி அமைக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (16) நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். நில அபகரிப்பு நோக்கிலான இந்த அடாவடித்தனமான செயலுக்கு…

Read More

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் சிலர் தெஹிவளை பொலிஸில் டிசம்பர் 07 ஆம் திகதி முறைப்பாடு அளித்திருந்தனர்.  சுமார் ஒன்றரை அடி நீளமுடைய இந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத்…

Read More

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 50 சதவீத மக்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது, இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 73.4 சதவீத மக்களுக்கும்  , அனுராதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட70.05 சதவீத மக்களுக்கும் , இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 68.39% சதவீத மக்களுக்கும், மாத்தளை…

Read More

பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு

ஜனாதிபதி தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என சீனா எதிர்பார்க்கிறது சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் சீனாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியை எதிர்பார்க்கிறேன் – ஜனாதிபதி டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப…

Read More

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவி கையளிப்பு!

“தித்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக, ஜப்பான் அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர கால நிதி உதவியை வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹெரத்தைச் சந்தித்து டிசம்பர் 16 அன்று இந்த முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த நிதியுதவி சர்வதேச அமைப்புகளான IOM, WFP மற்றும் UNICEF ஊடாகப் பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது: இந்த இக்கட்டான சூழலில் ஜப்பான் வழங்கிய உடனடி உதவிக்கு அமைச்சர் விஜித ஹெரத்…

Read More