சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
பொலிஸ் சார்ஜன்ட் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!
அளுத்கம – மத்துகம வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.