பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை அவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வருடாந்தம் இராஜதந்திர ரீதியாகவும், அமைப்புக்கள் மட்டத்திலும் மற்றும் தனிநபராகவும் நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்படும். அவற்றை வெளிநாட்டு செலாவணி செலவாகாத வகையில் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படல் வேண்டும். அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026.02.19 அன்று ஆரம்பித்து 2026.03.21 ஆம் திகதி முடிவடையவுள்ளது….

Read More

குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன்  குரங்கு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு குரங்கு கடிக்கு உள்ளான  12 வயதுடைய சிறுவனே தக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.  குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த சிறுவன் மாலை நேரத்தில் பள்ளிவாயலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சென்ற வேலையில் குரங்கு தாக்கியுள்ளது. 

Read More

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேனும்  ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வேனைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த…

Read More

காலி மாநகர சபையில் குழப்பநிலையை ஏற்படுத்திய மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது!

காலி மாநகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறப்படும் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். …

Read More

நாகொடை துப்பாக்கிச் சூடு ; காயமடைந்த “ரஜவத்தே சத்துவா” போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரா?

களுத்துறையில் நாகொடை வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,  நாகொடை வைத்தியசாலைக்குள் இன்று காலை 6.00 மணியளவில் நுழைந்த இனந்தெரியாத ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுத்துறை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் வெற்றி!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இயங்கும் கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாவது வாக்கெடுப்பு இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Read More

டித்வா சூறாவளி பாதிப்பு: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் உள்ளிட்ட 8 சுகாதார நிறுவனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். 

Read More

பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Read More

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரு இயந்திரங்கள் செயலிழப்பு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு மின் உற்பத்தி இயந்திரம் கடந்த நவம்பர் மாதம் முதல் செயலிழந்துள்ளது. அதேநேரம், மற்றைய மின் உற்பத்தி இயந்திரம் அதன் கொதிகலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இந்த இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் தேசிய மின் கட்டமைப்புக்கு 600 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது

Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 600க்கும் அதிகமானோர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 30,134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 294 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More