தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று சர்வதேச அன்னையர் தினம்
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது பிறந்தார். மேலும் அம்மை, டைபாய்டு மற்றும் டிஃப்தீரியா போன்ற நோய்களால் தனது உடன்பிறந்தவர்களில்…

