‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
குடும்பத்தகராறில் பெண்ணொருவர் கொலை
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

