உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

நகுலேஸ்வரப்பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.
“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவதுநாதன் நாமம் நமச்சிவாயவே” எம்பெருமான் சிவபெருமானை ஈசனாக தரிசிக்க ஈழத்தில் காணப்படுகின்றன பஞ்சஈஸ்வரங்கள். அதில் தலச்சிறப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரத்தில் இன்று(வெப்ரவரி 13) கொடியேற்றம் நிகழ்ந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது. நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமானுக்கு காலை 7மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் “அரோகரா” கோசத்தோடு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துவஜாரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது. மூர்த்தி,…