தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை உற்சாகமாககொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN) ‘Sunshine Soorya Mangalyaya 2025’ நிகழ்ச்சியுடன் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியது. இந்தக் குழுமத்தின் வருடாந்திர பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்தனர். அத்துருகிரியவிலுள்ள Steel Corporation மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள், சன்ஷைனின் ஒற்றுமை மற்றும் கூட்டு மகிழ்ச்சியின் பண்பாட்டை ஆழமாக எதிரொலித்தன. குழுமத்தின் பல்வேறு வணிகப் பிரிவுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து ஊழியர்கள் பாரம்பரிய புத்தாண்டு நடவடிக்கைகள்…

