இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.
முன்னொருபோதும் இல்லாதவகையில் தினமும் வெப்பநிலையில் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரிக்கை மட்டத்தை அடையவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்துவரும் 24மணிநேரத்துக்கும் இது நலவக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதன்படிவடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு அவசர தேவைகள் மற்றும் இதர முக்கிய கரணங்கள் இன்றி வெளியில் நடமாடுதல் தவிர்க்குமாறும், வெயிலில் வேலையெய்ப்பவர்கள் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளவேண்டும்…