‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
சாதாரணதர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

