இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்களை நிச்சயம் தண்டிக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து!
1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதைக்கூடத்தின் சூத்திரதாரிகள் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நல்ல…

