இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
இந்திய பிரதமரை வரவேற்க தயாராகியுள்ள இலங்கை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் மிக உன்னிப்பாக கண்காணிப்பும், முறையான செயற்திட்டமும் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி மற்றும் நிபந்தனைகளின் மாற்றத்தின் பின் நடைபெறும் முக்கிய சந்திப்பாகவும் உத்தியோக பயணமாகவும் இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் சர்வதேசத்தினால் பார்க்கப்படுகின்றது.

