இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
காலமானார் போப் பிரான்சிஸ்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார். ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை…

