இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
அமெரிக்கா விதித்த புதிய வரி தொடர்பில் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (ஏப்ரல் 10) அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

