உக்ரைன் உடனான போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்த ரஷ்யா

அமெரிக்காவின் போர்நிறுத்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், இது உக்ரைனுக்கு மாத்திரமே தற்காலிக ஓய்வு அளிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் (Yuri Ushakov) இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய தினம் யூரி உஷாகோவுடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம்

சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் போது உக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உக்ரைன் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா இன்னும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More