அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகிறார்கள் – எதிர்கட்சிதலைவர்.

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி, மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச களனி பிரதேசத்தில் நேற்று (வெப்ரவரி 16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.  சொன்னவற்றை செய்ய முடியாமல் தடுமாறும் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனவும், இந்த அரசாங்கம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பனவற்றை மீறி செயட்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Read More