இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
உப்பு இறக்குமதிக்கு அனுமதி
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க இன்று (மே 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பு மற்றும் நுகர்வோருக்கு தேவையான அயடின் கலந்த உப்பு இறக்குமதிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

